கரூர், செப்.23: கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பனை மரங்களை வெட்டினால் மாவட்ட ஆட்சித் தலைவரால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தோட்டக்கலைத்துறையில் பனைமரம் தொடர்பாக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செய்தி. பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக உள்ளது. பனைமரத்தின் ஓலைகள் ஓலைச்சுவடிகளாகவும், மேற்கூரை அமைக்கவும், ஜாடிகள், பாய்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் உண்ணக்கூடிய பொருட்களான பனை வெல்லம், பனை சர்க்கரை, கள், பதநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டு தமிழர் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குகிறது. மிகக் குறைந்த பராமரிப்பும், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்ட பனை குறைந்த தண்ணீரையே பயன்படுத்துகிறது.
+
Advertisement


