Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி உதவியாளர்கள் தங்குமிடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

குளித்தலை, செப்.23: கரூரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கியதை அடுத்து இரண்டாம் நிலையில் உள்ள குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் குளித்தலை அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் மகப்பேறு மருத்துவம், விபத்து சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதில் குழந்தைகள் மகப்பேறு மருத்துவம் தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது.

இதனால் தினந்தோறும் குளித்தலை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை தொடர்ந்து அங்கேயே தங்கி சிகிச்சை பெறும் நிலையில், உதவியாளராக இருக்கும் நபர்கள் தங்குவதற்கு வழிகள் இல்லாமல் ஆங்காங்கே இரவு நேரங்களில் தங்கி வந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சி காலத்தில் குளித்தலை நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளத்துடன் கூடிய சிறப்பு தங்குமிடம் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.