Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுகவைப்போல் தாவெக அரசு; மானாவாரி நீர் நிலைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

கரூர்., ஜூன் 23: கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மானாவாரி நீர் நிலைகளை பாதுகாத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை அரசு கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வடிவமைத்தல், கட்டுதல் மற்றும் பராமரித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. இது அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை கட்டுவதுடன், வெள்ளத் தடுப்பு மற்றும் நீர்வள ஆதாரங்களைப் பராமரிக்கும் பணிகளையும் நிர்வகிக்கிறது. அரசுத்துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் புதிய கட்டிடங்களைக் கட்டுதல் மற்றும் பழைய கட்டிடங்களைப் பழுதுபார்த்து பராமரித்தல்.

நீர்வள பாதுகாப்பான அணைகள், குளங்கள், ஏரிகள் மற்றும் பாசனக் கால்வாய்களைப் பராமரித்தல் மற்றும் தூர்வாருதல், அரசு குடியிருப்புகள், விடுதிகள், சிறப்புத் திட்டங்கள் கட்டும்பணிகளை செய்துவருகிறது. மேலும் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு செய்கிறது. இந்தத் துறை நெடுஞ்சாலைகள், பொதுப்பணிகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, குறிப்பாக பொதுப் பணித்துறை அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கே பரமத்தி, தோகைமலை, கடவூர் ஆகிய 8 ஒன்றியங்களில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குளங்கள், குட்டைகள் நீர்வரத்து பாதைகள், நீர் சேமிப்பு ஓடைகள் நீர்நிலைகள், பண்ணை குட்டைகள் உள்பட பல உள்ளன.

தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டு உள்ள நீர்நிலைகள் மற்றும் பிற குட்டைகளில் வறண்டு காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலைகளை பாதுகாத்திட வேண்டும். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி ஏரி, வெள்ளியணை குளம், ஜெகதாபி குளம், தாதம் பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குளங்கள் சுமார் 100 ஏக்கருக்கு மேல் 500 ஏக்கர் நிலப்பரப்பு வரை அமைந்துள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், மூச்செடிகள் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழை நீர் முழுமையாக நீர்நிலைகளுக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகள், நீர் ஓடைகள் குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் வருவதற்கு வசதி செய்யப்பட்டது. தற்போது புதிதாக பெற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு விவசாய நிலத்தில் அக்கறை கொண்டு நீர் நிலைகளை பாதுகாத்திட முன்வர வேண்டும்.