Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

லாலாபேட்டை அருகே பஞ்சப்பட்டி அரசுபள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்

லாலாப்பேட்டை, மே 22: லாலாபேட்டை அருகே பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகின. இதில் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே வேங்காம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அதேபோல் புனவாசிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 79 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.