Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை

கரூர், மே 22: 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வாங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்படி இந்த பள்ளியில் இருந்து தேர்வு எழுதிய 44 மாணவிகளில்டி 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98 ஆக உள்ளது. மேலும், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் இந்த பள்ளி மாணவி 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் பிரதான இடத்தை பெற்றுள்ளார். மேலும், இந்த பள்ளி மாணவர்கள் 400க்கு மேல் 14 மாணவிகளும், 350ல் இருந்து 400க்குள் 9 மாணவிகள் பெற்றுள்ளனர். 350ல் இருந்து 300க்குள் 14 மாணவிகள் பெற்றுள்ளனர். பல்வேறு சாதனகைளை புரிந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மேலாண்மைக் குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.