Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

14 மிமீ பதிவால் விவசாயிகள் மகிழ்ச்சி வேலாயுதம்பாளையம் அருகே மக்களை அச்சுறுத்திய கதண்டுகள் அகற்றம் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை

வேலாயுதம்பாளையம், ஆக. 21: வேலாயுதம்பாளையம் அருகே தென்னை மரத்தில் கூடுகட்டி மக்களை அச்சுறுத்திய விஷ கதண்டுகள் நீர் பாய்ச்சி அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (50). இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அந்த தோட்டத்தில் தென்னை பயிரிட்டுள்ளார். அங்கு இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து மோகன் புகளூர் தீயணைப்பு துறையினரிடம் புகார் செய்து கதண்டுகளை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தார் .அதன் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு இரவு நேரத்தில் விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி பொதுமக்களை தீண்டி அச்சுறுத்தி வந்த ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.