Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கரூரை குளிர்வித்த மழை

கரூர், ஆக. 21: ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கரூரில் நேற்று முன்தினம் மாலை 14 மிமீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. 14 மிமீ மழை பதிவாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ. ஜனவரி, பிப்ரவரியில் 16.8 மிமீட்டரும், கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 109.5 மிமீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் 238.4 மிமீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 287.5 மிமீட்டரும் என 652.20 மிமீ என கணக்கிடப்படுகிறது.

ஆண்டு சராசரி மழையை பெற தென்மேற்கு பருவமழையில் பெய்யும் மழைதான் உதவி வருகிறது. ஆனால், இந்தாண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் மழை பெய்யவே இல்லை. மாறாக, அக்னி நட்சத்திர வெயிலுக்கு நிகராக எல்நினோ காரணமாக கடும் வெப்பம் வாட்டி வருகிறது. கடந்தாண்டும் ஆண்டு சராசரி மழையை கரு்ர் மாவட்டம் பெறவில்லை. இந்தாண்டும் அதிகளவு மழையை மாவட்டம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக வெப்ப மயமாக காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை அரை மணி நேரம் கரூர் நகரப் பகுதிகளில் மட்டும் மழை பெய்து குளிர்வித்துள்ளது. அதன்படி, கரூர் 14 மிமீ, தோகைமலை 2 மிமீ என 16 மிமீ மழை மட்டுமே நேற்று முன்தினம் கரூர் மற்றும் தோகைமலையில் பெய்துள்ளது. எனவே, இனி வரும் செப்டம்பர் மாதத்திலாவது கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கரூர் மாவட்ட மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.