கரூர் மாநகராட்சி பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் சேர்க்குமா? மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கேள்வி
கரூர், ஆக. 20: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு சென்று பயிலும் வகையில் மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்டம் முழுதும் பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிக்கு வர இயலாத குழந்தைகள் ஆகியோர்களை கண்டறிந்து, அவர்களை திரும்பவும் பள்ளிக்கு வரும் சூழலை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரின் தலைமையில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கருர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வறுமை, விருப்பமில்லை, பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு குறைவு போன்ற சில காரணங்களால் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனு£ர் போன்ற பகுகளில் குடியிருக்கும் பெற்றோர்கள், அவர்கள் வேலைக்கு செல்வதால் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை பராமரிக்கும் வகையில், பள்ளிககு சென்று வரும் குழந்தைகளை வீட்டிலேயே தங்க வைத்து வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் மதிய உணவு, காலை உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பள்ளி செல்லா குழந்கைளை கண்டறிந்து, அவர்களுக்கான பிரச்னைகளை சரி செய்து, பெற்றோர்களுககு விழிப்புணர்வு வழங்கி பள்ளி செல்ல தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இந்த விசயத்தில், கூடுதல் அக்கறை எடுத்து, மாவட்டம் முழுதும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிகைகளை துரிதபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


