Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காவிரி நீர் திறப்பு விவகாரம்; தினந்தோறும் நீர்ப்பங்கீடே தீர்வு: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் பேட்டி

கரூர், ஜூலை. 20: கரூரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் 28 ஆண்டுகளாக பின்பற்றப்படுவது தவறான தீர்ப்பேயாகும். தினந்தோறும் நீர்ப்பங்கீடு தீர்வே எளிதானது. மேகேதாட்டு அணை, ஒழுங்காற்றுகுழு ஆகியவற்றிற்கு மாதாந்திர நீர்த் திறப்பே காரணம். கர்நாடகா வடிகாலாக தான் தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது. மறுசீரமைப்பு மனு தாக்கல் செய்யவேண்டும்.தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்றால் மேகேதாட்டு அணை கட்டும் எண்ணமே கர்நாடகாவிற்கு வந்திருக்காது. தமிழகம் வந்த முன்னாள் பிரதமரும், முன்னாள் முதல்வருமான தேவேகவுடா கர்நாடாவில வறட்சி என்கிறார். முதல்வர் டி.கே.சிவக்குமாரும் அதையே கூறுகிறார்.

கீழ்பவானி அணை பாசனத்தில் 1958ம் ஆண்டு முதல் நீர் பாசன விதிகளை பின்பற்றுவதில்லை. காவிரி தீர்ப்பையும் பின்பற்றுவதில்லை. கோடை காலத்தில் கொடிவேரியில் தண்ணீர் திறப்பு, குறுவைக்கு காளிங்கராயனில் நீர்த்திறப்பு ஆகியவற்றால விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். காவிரி ஆற்றங்கரையோரம் சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தப்படுகின்றன. அவர்கள் தண்ணீரை திருடி பயன்படுத்துகின்றனர் இது நீதிமன்ற அவதிப்பாகும். கள் இறக்குவது, பருகுவது அரசியல் அடிப்படை சட்டம் கொடுத்துள்ள உரிமை.

ஆனால் கள் இறக்குபவர்களை அரசு கைது செய்து வருகிறது. இதில் அரசு தான் குற்றவாளி. தமிழ்நாடு அரசு கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கவேண்டும். அறிவிக்காவிடில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். கடந்த 1876 77ல் எல்நினோ பாதிப்பால் வறட்சி ஏற்பட்டது. அப்போது மக்கள் உணவின்றி எலும்பும், தோலுமாக காட்சியளித்தனர். 3ல் ஒரு பங்கினர் உயிரிழந்தனர். தற்போது எல்நினோ பாதிப்பு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதி, அடுத்தாண்டு தொடக்கத்தில் அதன் பாதிப்பு தெரியும். இதுதொடர்பாக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.