Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளித்தலை தென்கரை வாய்க்காலில் இடிந்து விழும் நிலையில் படித்துறை

குளித்தலை, ஜூன் 19: இடிந்துவிழும் நிலையில் உள்ள படித்துறையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குளித்தலை தென்கரை வாய்க்கால மாயனூரில் இருந்து பெட்டவாய்த்தலை வரை செல்கிறது. இதனால் அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் பெண்கள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு பயன்படுத்திவந்தனர். மேலும் மாரியம்மன் கோயில் பண்டிகை காலங்களில் இங்கிருந்து தான் நீராடி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இதனால் எப்பொழுதும் இந்த ஹை ஸ்கூல் படிக்கட்டுத்தரை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடமாக இருந்து வருகிறது. இவ்விடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படிக்கட்டு அமைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது இந்த படிக்கட்டுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆற்றுப்பாதுகாப்பு பொதுப்பணி நீர் வழித்துறை அதிகாரிகள் படிக்கட்டுதுறை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.