Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை முதல் நடக்கிறது போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூர், மே 19: போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்குகிறது. கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆண்டிற்கான ஆண்டுத்திட்ட நிரலின்படி, 2026ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-I, II, IV போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் மே மாதம் நாளை 20ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது.