Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மண் வளத்தை பெருக்கும் பசுந்தழை உரங்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை

கரூர், மே 19: பசுந்தழை உரங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து தெரிவித்துள்ளதாவது: பசுந்தழை உரங்கள் என்பது வயல் ஓரங்களில் அல்லது வயல் அருகில் இருக்கும் வேம்பு, கிளிரிசிடியா, கரஞ்சி (பொங்காமியா பொளாப்ரா), எருக்கு, சுபாபுல், கொன்றை மரம், புங்கன் போன்ற பசுந்தழைகளை மண்ணில் அடக்கி உழலாம். இதனால், பசுந்தழை உரங்களை இடுவதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம், நீர் பிடிப்பு திறனை அதிகரிக்கும். மண் அரிப்பால் ஏற்படும் இழப்பு தடுக்கப்படும். பயிர்கள் எதுவும் பயிரிடப்பாத பருவத்தில் வளர்க்கப்படும் பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியை குறைக்கலாம். காரத் தன்மையுள்ள மண்ணை சீர்த்திருத்துவதற்கு உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.