Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறுப்பு ஆணையர் பதவியேற்பு

வேலாயுதம்பாளையம், ஜூன் 18: புகழூர் நகராட்சி ஆணையாளராக முனியப்பன் மார்ச் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகராட்சி ஆணையாளர் சுதர்சன் பொறுப்பு ஆணையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த வெங்கடாஜலபதி புகழூர் நகராட்சி ஆணையாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட வெங்கடாஜலபதியை நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் மலர்கொடி, நகராட்சி அலுவலக மேலாளர் நைனா முகமது, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ், மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.