கருர், செப். 17: தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடப்பதாக கலெக்டர் தெரித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி செப்டம்பர்-2026 மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 18.09.2026 வெள்ளிக்கிழமையன்று வெண்ணைமலை(கரூர்) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர்.
இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.கரூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் வேலையளிப்பவர்களும், வேலைநாடுநர்களும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை இம்முகாம் முற்றிலும் இலவசமானது பணிநியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04324-223555 மற்றும் 9499055912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


