Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாலாபேட்டை அருகே கொடிங்கால் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்

லாலாப்பேட்டை, ஜூன் 16: லாலாபேட்டை அருகே புதுப்பட்டி பகுதியில் நாணப்புற்கள் மற்றும் சீத்த கருவேல மரங்கள் நிறைந்து காணப்படும் கொடிங்கால் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே புதுப்பட்டி சைபன் பகுதியில் இருந்து கொடிங்கால் வடிகால் வாய்க்கால் உதயமாகி கே.பேட்டை, கோட்டமேடு, பரளி, மேட்டு மருதூர், குமாரமங்கலம், பெட்டவாய்த்தலை வழியாக சென்று உய்யங்கொண்டான் வாய்க்காலுடன் கலக்கிறது.

மேலும் கடவூர் பகுதியில் இருந்து வரும் பூங்காற்று வாரி மூலமும் மழைக்காலங்களில் இந்த பகுதிக்கு உபரி நீர் வருகிறது. இந்நிலையில் புதுப்பட்டி சைபனிலிருந்து உதயமாகி செல்லும் கொடிங்கால் வடிகால் வாய்க்காலில் நாண புற்கள் மற்றும் சீத்த கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வடிகால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபட்டும் காணப்படுகிறது. எனவே இந்த கொடிங்கால் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.