Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கரூர் பகுதியில் மைல்கற்களை மறைக்கும் முட்செடிகள்

கரூர், ஜூலை 14: கரூர் மாவட்ட பகுதிச் சாலையோரம் செல்லும் பகுதிகள் குறித்து வாகன ஓட்டிகளுககு தெரியப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள மைல்கற்களை மறைக்கும் முட்செடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சியை சுற்றிலும் திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல் போன்ற முக்கிய நகரங்களுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதே போல், மாவட்டத்தின் உட்புற பகுதிகளுக்கும் மாவட்ட சாலைகள் அதிகளவு கிமீ தூரத்தில் செல்கிறது.

இந்நிலையில், இந்தச் சாலையில் வாகன ஓட்டிகள் எளிதில் தெரிந்து கொண்டு இலக்கை நோக்கி செல்லும் வகையில் ஆங்காங்கே மைல்கற்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சாலையோரம் அதிகளவு வளர்ந்துள்ள முட்செடிகள் மைல்கற்களை மறைத்து வளர்ந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்லும் இடம் எவ்வளவு தூரம் என்பது குறித்து தெரியாமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. பைபாஸ் சாலைகள் மட்டுமின்றி, கிராம பகுதிகளுக்கான சாலைகளிலும் இதே போன்ற நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் சாலையோரம் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி எளிதான போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.