Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குளித்தலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்

குளித்தலை, ஜூலை 14: கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசிப்பவர் முனியசாமி (43). இவர், நல்லூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் சக்திவேல், வீட்டை பழுது பார்க்க வேண்டும் ஆகையால் வீட்டை காலி செய்யக் கூறியதாக தெரிகிறது. இதனால் முனியசாமி வேறு ஒரு வீடு பார்த்து முன் தொகை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த குப்பைகளை வெளியில் வைத்து தீ வைத்த போது சக்திவேல் எதற்காக தீ வைக்கிறாய்? என கேட்டு தகாத வார்த்தைகளால் முனியசாமியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த முனியசாமி, அவரது மனைவி முத்துவையும் சக்திவேல் மற்றும் அவரது சகோதரர் சந்திரசேகர் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, குளித்தலை போலீசில் புகார் செய்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் சகோதரர்கள் சக்திவேல் சந்திரசேகர் ஆகியோர் மீதுவழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்