ரூ.5 லட்சம் பரிசுடன் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது
Advertisement
கரூர்,டிச.10: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி என கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் தேர்வு செய்கிறார். 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது
Advertisement