Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கிருஷ்ணராயபுரம் அருகே சத்துணவு கூடத்தில் தீ விபத்து

கிருஷ்ணராயபுரம், ஜுலை 10: கிருஷ்ணராயபுரம் அருகே சத்துணவு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு திருக்காம்புலியூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 175 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தில் வழக்கம் போல் சத்துணவு பணியாளர்கள் மாலா மற்றும் சாந்தி ஆகிய இருவரும் சத்துணவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உணவுகள் சமைத்து முடித்த பிறகு முட்டை வேக வைக்கும் பணியில் ஈடுபட்டபோது சமையல் சிலிண்டரில் உள்ள குழாயில் கேஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. தீ மள மளவென கொழுந்து விட்டு எறிய தொடங்கியதால் சத்துணவு பணியாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.