Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளித்தலை அரசு கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு

குளித்தலை, ஜூன் 9: குஉயர்கல்வி அறிவுறுத்தலின்பேரில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் 2026 -27ம் கல்வியாண்டிற்கான அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அறிவியல் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 335 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பொ. அன்பரசு தலைமை வகித்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் பாடப்பிரிவில் காலியாக உள்ள 335 இடங்களில் 114 இடங்கள் இனச் சுழற்ச்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவ மாணவியர்கள் 114 பேர் கல்லூரியில் நேற்று முதலாம் கட்ட கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இதனையடுத்து காலியாக உள்ள 221 இடங்களுக்கு வருகின்ற 11ம் தேதி வியாழக்கிழமை இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். இந்த கலந்தாய்விற்கு கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து அறிவியல் பிரிவு மாணவர்களும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இன்று 9.6.2026 அன்று முதலாம் கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக வணிகவியல் (தமிழ், ஆங்கிலம் வழி) வணிகவியல் கணினி பயன்பாட்டியல் வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.