Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடிமகன்கள் அட்டகாசம் திருவள்ளுவர் மைதானத்தில் மதுபாட்டில்கள்

கரூர், ஜூன் 9: கரூர் மாநகராட்சியின் மைய பகுதியில் திருவள்ளுவர் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் மாவட்ட மைய நுாலகத்தின் கூடுதல் மற்றொரு அலுவலகம் செயல்படுகிறது.மற்றொரு பகுதியில் கூடைப்பந்து மைதானமும், கேலரியும் அமைந்துள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இந்த மைதானத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியும் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தின் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்த கூடைப்பந்து போட்டியும் உள்ளது.

மேலும், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை பல ஆண்டுகளாக சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நிகழ்வுகள் அனைத்தும் இந்த மைதானத்தில்தான் நடைபெற்று வந்தது. அந்தளவுக்கு மிக முக்கியமான மைதானமாக திருவள்ளுவர் மைதானம் உள்ளது. இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இ்நத திருவள்ளுவர் மைதானத்தில இரவு நேரங்களில் மைதானத்தின் உட்புறம் அத்துமீறி வரும் குடிமகன்கள் சரக்கு அடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் சைடீஸ்களை அப்படியே போட்டு விட்டு செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.இதன் காரணமாக மைதானத்திற்குள் வரும் பொதுமக்களும், வாசகர்களும், விளையாட்டு வீரர்களும் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் எனக் கூறப்படுகிறது.

மேலும், இ்நத மைதானத்தின் அருகிலேயே கருர் சட்டமன்ற தொகுதி அலுவலகமும் உள்ளது. அந்தளவுக்கு இந்த திருவள்ளுவர் மைதானம் மக்கள் மத்தியில் புகழ் பெற்ற மைதானமாக உள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயங்களில் நகரப் பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசை சரி செய்யும் வகையில் தீபாவளி தரைக்கடைகளும் இந்த மைதானத்தில் நடைபெற்றது.எனவே, கரு்ர் மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மைதானத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.