Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுக்கடைகளை குறைத்த லட்சணம் சட்ட விரோதமாக மதுவிற்ற 108 பேர் கைது

கரூர், ஜூன். 8: கரூர் மாவட்டத்தில் மே 1ம்தேதி முதல் 31ம்தேதி வரை அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக் மது விற்பனை செய்ததாக 108 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இ்நத கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற சமயங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை கட்டுப்படுத்திட மாவட்ட எஸ்பியின் உத்தரவின்பேரில், மதுபான விலக்கு பிரிவு போலீசார்களும், அந்தந்த காவல் நிலைய போலீசார்களும் அதிரடி சோதனை மேற்கொண்டு மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மதுபானங்களை பறிமுதல் செய்து வருகி்ன்றனர்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் டவுன், வெங்கமேடு, வாங்கல், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெள்ளியணை, க,பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, லாலாப்பேட்டை, மாயனுார், குளித்தலை, நங்கவரம், தோகைமலை, பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு மதுபானம் பதுக்கி வைப்பது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், மே 1 ம் தேதி முதல் 31ம்தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 108 பேர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 3892 குவார்ட்டர் பாட்டில்களைபோலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.