வேலாயுதம்பாளையம், டிச. 7: புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் உள்ள 29 பூத்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 படிவங்கள் 25,579 படிவங்கள் பிஎல்ஓகள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளர்களிடம் இருந்து நேரடியாக 100 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறப்பட்டு அந்த படிவங்களை சம்பந்தப்பட்ட பல துறை பணியாளர்கள் மூலம் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement


