கரூர், டிச. 7: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக்கூடிய 1991ம் ஆண்டு இயக்கப்பட்ட வழிபாட்டு உரிமை பாதுகாப்புச்சட்டத்தை பாதுகாக்க கூறியும் வக்ஃப் அமல்மன்ட் அக்டை திரும்பப்பெற கூறியும் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமுமுக கரூர் மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்சாரி, மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாகீர், மாவட்ட பொருளாளர் சவ்வாஸ் ஜாஃபர் , பள்ளப்பட்டி நகர தலைவர் சூழபுரம் லுக்மான் முன்னிலை வகித்தனர்.


