Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கரூர் கையேந்தி பவன்களில் பிஸாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு

கரூர் ஜூலை 6: கரூரில் சாலையோர உணவு கடைகள் கையேந்தி பவன் கடைகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சாலையோர கடைகளும் கையேந்தி பவன் அதிகரித்துள்ளன. கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை ரேஷன் அரிசியால் தயார் செய்யப்பட்டு இட்லி ரூபாய் 8 முதல் 10 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கரூர் பஸ் நிலையம் கோவை ரோடு கரூர் போஸ்ட் போலீஸ் நிலையம் பகுதி ஆகியவற்றில் ஒரு இட்லி ரூ. 15 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

20 ரூபாய்க்கு விற்பனையான தோசை வகைகள் ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது 20 ரூபாய்க்கு விற்பனையான ஆப்பம் ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டை விலை ரூ. 8 ஆக இருக்கும் பொழுது முட்டை விலை விலை ஏற்றம் எனக்கூறி 12 ரூபாய்க்கு விற்பனையான ஆம்லெட் ரூ. 15 ஆக உயர்ந்தது. தற்போது முட்டை ரூ. 5.50 முதல் ரூ. 6 விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடைகளில் ஆம்லெட் ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் கையேந்திபவன் உடல் உணவு விடுதிகளில் சாப்பிடுவதற்கு கண்கழுங்கி நிற்கின்றனர். மேலும் கையேந்தி சாலையோர கடைகளில் முறையாக சுத்தம் பராமரிப்பது மிகவும் குறைவு.

விலை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் கையேந்திபவன் உணவுகளை தேர்வு செய்கின்றனர். உணவுப்பொருள் உணவு பரிமாற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தப்படுகின்றன. சாலையோர கடை உரிமையாளர்கள் கேஸ் தட்டுப்பாடு காரணத்தால் விலை ஏற்றும் என்று கூறினாலும் பொதுமக்கள் சமையல் கேஸ் மூலம் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதில்லை. இதற்கு கருத்தில் கொண்டு கையேந்தி பவன் சாலையோர உணவு கடை உரிமையாளர்கள் விறகு அடுப்பால் தயார் செய்யப்பட்ட பொதுமக்களுக்கு மலிவான விலையில் பொருட்களை உணவு கட்டுப்பாடு துறை அதிகாரிகள் கரூர் மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.