Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குளித்தலை வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்

குளித்தலை, நவ. 4: கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில், குளித்தலை வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026ம் ஆண்டிற்கான சிறப்பு பருவப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள். தங்களது பயிர்களுக்கு குறைந்த பிரீமியத் தொகையில் காப்பீடு செய்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

நெல் சம்பா பருவத்திற்கு ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.39,300. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.589.50. காப்பீடு செய்ய வேண்டிய கடைசி வரும் 15ம்தேதி பயிர்க் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், நில ஆவணங்கள் மற்றும் பயிர் சாகுபடி தொடர்பான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது பயிர் சாகுபடிக்கான உரிய சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விவசாயிகள் தங்களது பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மூலம் பயிர்க் காப்பீட்டுப் பதிவை மேற்கொள்ளலாம். மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் உதவுகிறது. எனவே, விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து பயன் பெறுமாறு குளித்தலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் தகவல் தெரிவித்துள்ளார்