Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமாநிலையூர் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில், ரொக்கம் திருட்டு

கரூர், ஆக. 3: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகே டாஸ்மாக் கடையின் பின்புறம் துளையிட்டு மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து சரக்கு மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் ராயனூர் இடையே காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. நேற்று காலை இந்த கடையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் கடைக்கு சென்று கடையை திறந்து பார்த்த போது, கடையின் பின்புறம் சுவற்றில் துளை போட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கடை பணியாளர்கள் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கடையின் பின்புற சுற்றில் துளையிட்டு உள்ளே சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், எவ்வளவு பணம் மற்றும் சரக்கு பாட்டில்களை திருடிச் சென்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.