Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் லைட் ஹவுஸ்கார்னர் ரவுண்டானா பகுதியில் சிக்னல் விளக்கு எரியவில்லை

கரூர், ஜூலை 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள சிக்னல் பல நாட்களாக எரியவில்லை இதனால் விபத்துகள் நடப்பதற்கு முன் சிக்னலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து திருச்சி, திண்டு்க்கல், மணப்பாறை, குளித்தலை, தாந்தோணிமலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் அனைத்தும் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக செல்கிறது. இதே போல், இந்த பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் லைட்ஹவுஸ் கார்னரை தாண்டித்தான் செல்கிறது.

அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுவதன் காரணமாகவும், சில விபத்துக்கள் நடைபெறுவதாலும் சில ஆண்டுகளு்்க்கு முன்பு இந்த கார்னர் பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே இ்ந்த சிக்னல் பயன்பாட்டில் இருந்தது. அதற்கு பிறகு சிக்னல் செயல்படவில்லை. இதனால், இந்த நான்கு ரோடு சந்திக்கும் சாலையில் சிக்னல் இல்லாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, ்சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சிக்னலை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.