Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடவடிக்கை எடுக்கப்படுமா?.. கரூரில் அதிகரித்து வரும் கந்து வட்டி கொடுமை

கரூர், ஜூலை. 3: கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கந்து வட்டிக் கொடுமையை முற்றிலும் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் கடை வியாபாரிகள் இவர்களுக்கு அந்த வருவாய் போதுமானதாக வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களை நாடி அவசர தேவைக்கு பணத்தை பெற்றுக்கொண்டு பின்னர், குறிப்பிட்ட நாளில் பணத்தை கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர்கள் குறி வைத்து, நாள் வட்டி, வார வட்டி, மீட்டர் வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி என பணம் பல்வேறு வட்டிகளில் பணம் கொடுக்கப்படுகிறது.

பின்னர் காலை கொடுத்தால் மாலை திரும்ப வழங்க வேண்டும் என நாள் வட்டியும் கரூர் மாநகர பகுதியில் படுஜோராக நடந்து வருகிறது. இது மட்டுமின்றி, வார வட்டி, மாத வட்டி போன்ற பல்வேறு வடிவங்களில் பணம் கந்து வட்டிக்கு விடப்பட்டு குறிப்பிட்ட நாளில், நேரத்தில், கட்டாவிட்டால், வாகனங்களை பறிமுதல் செய்வது, கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அடியாட்கள் வைத்து பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். இது குறித்து வெளியே சொல்ல முடியாமல் பணத்தை வாங்கியவர்கள் மன வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். சில மாவட்டங்களில் கந்து வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு திரும்ப கட்ட முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தது. ஆனால், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் படுஜோராக நடைபெற்று வருகிறது.

ஆனால், வாங்கியவர்களின் பாடுதான் மிகவும் திண்டாட்டமாக உள்ளது. ஆனால், இதுபோல, கந்து வட்டிக்கு பணத்தை வாங்கி விட்டு பின்னர் கட்ட முடியாமல் மக்கள் தினமும் அவதிப்படும் நிலை குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை கரூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தினால், இந்த பிரச்னை ஒரளவுக்கு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. கரூர் மாநகர பகுதியில் உள்ள தொழிலாளர்களை கணக்கெடுத்து, அவர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்கள் பிரச்னை குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கந்து வட்டி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.