Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் மாநகரப் பகுதியில் நின்று நின்று செல்லும் மினி பஸ்களால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு

கரூர், ஜூலை. 3: கரூர் மாநகர பகுதிகளை கடந்து செல்லும் மினி பஸ் விதிமுறைகளை பின்பற்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மினி பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெங்கமேடு, பசுபதிபாளையம், புலியூர், ஐந்து ரோடு, தாந்தோணிமலை, ராயனூர், காந்தி கிராமம் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் இதில் பயணித்து வருகின்றனர்.

கரூர் மினி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் சில மினி பஸ்கள் மாநகர பகுதிகளுக்குள் விரைந்து செல்லாமல் நிறுத்தி, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மெதுவான வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால், மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு ஒரு சில பகுதிகளில் சில மினி பேருந்து ஓட்டுநர்களின் செயல்பாடு காரணமாக போக்குவரத்து நெருக்கடி போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகாஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.