கரூர், நவ. 2: கரூர் வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இரயில்வே தேர்வு வாரியம்-2026 அறிவித்துள்ள RRB NTPC GRADUATE 3,548 காலிப்பணியிடங்கள் மற்றும் RRB NTPC UNDER GRADUATE 1,688 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 7.10.2026 அன்று https://rrb.indianrailways.gov.in. என்ற இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. RRB NTPC GRADUATE தேர்வுக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும் மற்றும் RRB NTPC UNDER GRADUATE கல்வித்தகுதி 12ம்வகுப்பு ஆகும். மேலும், இதர தகவல்களுக்கு https://rrb.indianrailways.gov.in. என்ற இணையதளத்தை பார்வையிடவும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது.
ஆகையால் இப்பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மனுதாரர்கள் 2 புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார்அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வரும் 9ம்தேதி நேரில் வருகை புரிந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழித் தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04324-223555, 6383050010 மற்றும் 6374319939 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம். கரூர் மாவட்டத்தைச் சார்ந்த இப்போட்டித்தேர்வுக்கு விருப்பமுள்ள மனுதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு இத்தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.


