கரூர், அக். 2: கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மற்றும் புலியூர் தனியார் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் இணைய வழி குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் புனிதா மற்றும் அகடாமி ஹெட் சதீஸ்குமார் பங்கேற்றனர். இந்த பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து புலியூர் பேருந்து நிறுத்தம் வரை கல்லூரியின் மாணவ -மாணவிகள் மற்றும் போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.
+
Advertisement

