கரூர், அக். 2: கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்தி்க் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:அக்டோபர் மாதம் 3, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில், 770 நியாய விலைக் கடைகளை சேர்ந்த 34,087 குடும்ப அட்டைதாரர்களுக்கு , அவர்களின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
+
Advertisement


