Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காந்தி ஜெயந்தி இன்று மதுக்கடைகள் மூடல்

கரூர், அக். 2: கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இன்று (2ம் தேதி) “காந்தி ஜெயந்தி’’ என்பதால், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் எப்எல் 1, 2 மற்றும் எப்எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர்தினமாக (DRY DAY) அனுசரிக்கப்படவேண்டும் எனவும், அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் எப்எல்1, 2 மற்றும் எப்எல்.3 உரிமம் கூடங்கள் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் விற்பனை ஏதும் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி தினத்தன்று இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் எப்எல்1, 2 மற்றும் எப்எல்.3 வரையிலான உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுவிற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.