Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் தாந்தோணிமலை அருகே முதியவர் மர்மச்சாவு

கரூர், ஜூன் 2: கரூர் தாந்தோணிமலை அருகே அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை அடுத்துள்ள சுக்காலியூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக இந்த பகுதி விஏஒ தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, இறந்து கிடந்த 60வயதுடைய முதியவர் யார்? என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.