Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளித்தலை அருகே லோடு ஆட்டோ மோதி முதியவர் காயம்

குளித்தலை, ஜூலை 1: குளித்தலை அருகே லோடு ஆட்டோ மோதி முதியவர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சி மேலபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (76). இவர் கடந்த 28ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் டூவீலர் அவருடன் பின்னால் அமர்ந்து கொண்டு வளையப்பட்டியில் இருந்து மேலப்பட்டி செல்லும் சாலையில் சென்றனர். அப்போது சாலை வளைவில் குப்பாச்சிப்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார் ஓட்டி வந்த லோடு ஆட்டோ எதிரே மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்து. பின்னர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து நடராஜன் மகன் பிரவீன்(37) குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.