Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா மே 1ம் தேதி நடக்கிறது

நாகர்கோவில், ஏப்.29: பத்துகாணி காளிமலை விழாக்குழு தலைவர் பத்மகுமார், பொதுசெயலாளர் சுஜித்குமார், பாஜ நிர்வாகி முத்துராமன் ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் காளிமலை அமைந்துள்ளது. இங்கு காளி தேவி, தர்மசாஸ்தா, நாகயட்சி, அகஸ்திய முனி, வனதுர்கை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி இங்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா வரும் மே 1ம் தேதி நடக்கிறது. மலை உச்சியில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். இதனையொட்டி விழா நிகழ்வுகள் கடந்த 25ம் தேதி தொடங்கியுள்ளன. மே 1ம் தேதி காலை 10 மணிக்கு மலைவாழ் மக்கள் வசிக்கும் 48 காணி செட்டில்மென்ட் மூட்டுகாணிகளுக்கு பூரண கும்ப வரவேற்பு நடைபெறுகிறது. 9.30 முதல் 10 மணி வரை சித்ரா பவுர்ணமி பொங்காலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் நடைபெறுகின்ற சமய கருத்தரங்கில் சாந்தானந்தா மகரிஷி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இரவு 12 மணிக்கு மகா காளியூட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக கேரள மாநிலம் பாலராமபுரத்தில் இருந்து ரத யாத்திரையும், திற்பரப்பில் இருந்து புனித யாத்திரையும் தொடங்கியுள்ளன.