Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அருமனையில் அனைத்து கட்சியினர் போராட்டம்

அருமனை, பிப்.24: அருமனையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை அனைத்து கட்சியினர் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. போராட்டக்குழு தலைவர் சசன்குமார் தலைமை வகித்தார். கவுன்சிலர் கமலன், கிங்சிலி சாலமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சாதாரண எளிய பொதுமக்கள் பத்திரப்பதிவு துறையினரின் செயல்களால் சொத்துக்களை வாங்க, விற்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். சொத்துக்களை வாங்க ஏற்கனவே கொடுத்த பணம் திரும்ப கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.