Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பளுகல் அருகே பைக் மீது ஆட்டோ மோதி 5 பேர் காயம்

மர்த்தாண்டம், ஏப். 23: கேரள மாநிலம் பாறசாலை அருகே கோடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஷிபின்(22) எலக்ட்ரிஷியன். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜாய்(40) என்பவரும் சேர்ந்து ஷிபினுடைய பைக்கில் கண்ணுமாமூட்டிலிருந்து பாறசாலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பளுகல் அருகே சென்ற போது, ஒத்தசேகரமங்கலம் பகுதியை சேர்ந்த ரெஜின்(20) ஓட்டி வந்த ஆட்டோ ஷிபின் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷிபின் மற்றும் ஜாய் படுகாயடைந்தனர். மேலும் ஆட்டோ ஓட்டிய ரெஜின், உள்ளே இருந்த அவரது தாய் சுஜி(42), தங்கை ரியாசிங் என 5 பேர் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து ஷிபின் பளுகல் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் ரெஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.