Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுசீந்திரம் அருகே தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

நாகர்கோவில், ஏப்.23 : நாகர்கோவில் புத்தளம் உசரவிளை பகுதியை சேர்ந்தவர் சுடலையாண்டி (44). சமையல் தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் சுடலையாண்டி வீட்டுக்கு புறப்பட்ட போது, செல்போனில் பேசிய மர்ம நபர், உசரவிளை பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் வருமாறு கூறி உள்ளார். அந்த பகுதிக்கு சுடலையாண்டி சென்ற போது மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பினர். படுகாயமடைந்த சுடலையாண்டி, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடலையாண்டியை தாக்கிய கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள்.