Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி கடற்கரையில் 100 சதவீத தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி,ஏப்.22: தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை ) நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி நகராட்சி நிர்வாகம் சார்பில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் பாய்மர படகு மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் சுப நந்தா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பட்டுச்சாமி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் நல அமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார ஆய்வாளர் அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்றனர்.