Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வள்ளலார் பேரவையில் சித்திரை திருநாள் விழா நீதிபதி விக்டோரியா கவுரி பங்கேற்பு

நாகர்கோவில், ஏப்.16: நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வள்ளலார் பேரவையில் சித்திரைத் திருநாள் விழா நடந்தது. தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா தலைமை வகித்தார். வள்ளலார் பேரவை செயலாளர் மகேஷ் வரவேற்றார். விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அருட்ஜோதி ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். உலக அமைதி வேண்டி, அனைத்து உயிர்கள் நலம் வேண்டி, வெப்பத்தின் உக்கிர பிடியில் இருந்து மக்கள் தப்பி கோடை மழை பெய்திட, திரு அருட்பா திருவடிப் புகழ்ச்சி பாராயணத்தை சேலம் மாவட்ட நீதிபதி எஸ்.எழில்வேலன், பொன்ஜெஸ்லி கல்வி குழுமம் மற்றும் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் பொன்.ராபர்ட் சிங் மற்றும் இரணியல் சீரடி  அனுகிரக சாய்பாபா அன்பாலயம் நிறுவனர் கோலப்பன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் தினேஷ் கிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.