Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுசீந்திரம் கோயில் தெப்பக்குளம் நிரம்ப பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை

நாகர்கோவில், ஏப்.16: கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18-4-2026 முதல் 27-4-2026 வரை நடைபெற உள்ளது. 26-4-2026 அன்று தேரோட்டமும், 27ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. தற்போது தெப்ப குளத்தில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவு பெற்றுள்ளது. தெப்பத் திருவிழாவின் போது தாணுமாலயன் சுவாமியும், பார்வதி அம்மாளும் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து தெப்பத்திருவிழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. வழக்கமாக பெருஞ்சாணி அணையிலிருந்து இதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு பழையாறு வழியாக சுசீந்திரம் சோழன் திட்டை அணைக்கு தண்ணீர் வந்து சேரும். அப்போது இந்த அணையின் ஷட்டர் போடப்படும் போது தண்ணீர் சுசீந்திரம் கோயில் குளத்துக்கு வரும். இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. எனவே உடனடியாக பெருஞ்சாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தோறும் நடைபெறும் தெப்பத் திருவிழா நடப்பாண்டிலும் சிறப்புடன் நடைபெற மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.