Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோதையாற்றில் கலந்த கழிவுநீர் குழாய்கள் அடைப்பு பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை

அருமனை, ஏப்.12: களியல் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோதையாற்றில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் கழிவுநீர் கோதையாற்றில் கலப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து அறிந்த கடையல் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின்ராஜ் தூய்மை பணியாளர்களை கொண்டு களியல் சந்திப்பு பகுதியில் ஆக்ரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் பைப்புகளில் இருந்து கழிவுநீர் கோதையாற்றில் கலப்பதை அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.