குளச்சல், டிச.10: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் பைங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நண்பரின் முகநூல் கருத்துக்கு தனது பதிலை பதிவு செய்திருந்தார். அந்த கருத்துக்கு வேறொரு நபர் எதிர்கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் அந்த நபர் பைங்குளம் நபர் தனது மகளுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த பைங்குளம் நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். சைபர் கிரைம் போலீஸ் இது தொடர்பாக ஆபாச பதிவிட்ட அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து மகளிர் போலீசார் ஆபாச பதிவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


