நாகர்கோவில், டிச.10 : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டத்திற்கு புதுடெல்லி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணை செயலாளர் விஜய் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குமரி மாவட்டம் வருகை தந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
+
Advertisement


