குளச்சல், ஏப்.10: குளச்சல் அருகே கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் பாபுஜான் (44). மீனவர். இவர் சம்பவத்தன்று குளச்சல் துறைமுகத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து கொண்டிருந்தனர். அந்தசமயம் கும்பலில் ஒருவர் பாபுஜானிடம் நீ யார்? எந்த ஊர்? எனக்கேட்டார். அதற்கு பாபுஜான் தனக்கு கோடிமுனை தான் என கூறியுள்ளார். எனினும் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு 5 பேரும் சேர்ந்து பாபுஜானை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபுஜான் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மீனவரை தாக்கிய ராஜன் உள்பட கண்டால் தெரியும் 4 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement
