குளச்சல், ஏப்.10: குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் சேசய்யா (78). மீன்பிடி தொழிலாளி. இவர் வயது மூப்பு காரணமாக தொழிலுக்கு செல்லாமல் இருந்து வருகிறார். சம்பவத்தன்று சேசய்யா பால் வாங்குவதற்காக சென்றார். அப்போது அப்பகுதியில் தனக்கு தெரிந்த நபருடன் பேசி கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக சென்ற கார் சேசய்யா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேசய்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் அருள் ஜோட்லின் (35) என்பவர் குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


