கருங்கல், ஏப். 10: கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெஸ்ட் எஜூகேஷன் நிறுவனத்தின் கல்வி இயக்குநர் பிரியா ஜெனிபர் விழாத் தலைவராகவும், திருத்துவபுரம் மறைவட்ட முதல்வர் அருட்பணியாளர் ஒய்ஸிலின் சேவியர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டம் வழங்கினர். விழாத் தலைவரும் சிறப்பு விருந்தினரும் குழந்தைகளை எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டுமென்று பெற்றோருக்கு அறிவுரை கூறி பேசினர். பள்ளி தாளாளர் அருட்பணி. சர்ஜின் ரூபஸ், நிதிபரிபாலகர் அருட்பணி. ஜியோ ஆகியோர் மாணவர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினர். பள்ளி முதல்வர் றசல் ராஜ் பள்ளி செயல்பாடுகள் குறித்து பேசினார். விழாவில் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவை பள்ளி தாளாளர் அருட்பணி சர்ஜின் ரூபஸ், நிதி பரிபாலகர் அருட்பணி. ஜியோ மற்றும் பள்ளி முதல்வர் றசல் ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
+
Advertisement


