குமரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து
குலசேகரம், டிச.9: குமரி மேற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக மாணவரணியின் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளரான அமைச்சர் மனோ தங்கராஜை கருங்கல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களிடம் திராவிட சிந்தனைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், முதல்வரின் சாதனை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வின்சர், துணை அமைப்பாளர்கள் சிவன், நூரூல் பசிரா மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement